பெரும் சோகத்தை ஏற்படுத்திய மாணவனின் உயிரிழப்பு

மஸ்கெலியா சமனெலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மரத்திலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய எஸ்.ஜே.ரஜிந்த துல்சான் குணசேகர என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை பிரவுன்லோ வனப்பகுதிக்கு தனது சகோதரனுடன் விறகு சேகரிக்கச் சென்ற போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் மரத்திலிருந்து தவறி விழுந்த நிலையில், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சிறுவனின் சடலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையிலிருந்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குச் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.