நாங்கள் விலகுகின்றோம்; ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பு!

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பிலிருந்து தாம் விலகுவதாக ரஷ்யா அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான நடவடிக்கை தங்களது மதிப்புகளுக்கு எதிரானது என உலக சுற்றுலா அமைப்பு தெரிவித்திருந்தது.

அத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி ரஷ்யாவை உலக சுற்றுலா அமைப்பு தமது அமைப்பிலிருந்து இடைநிறுத்தி இருந்தது.

இந்த நிலையிலேயே அவ்வமைப்பிலிருந்து விலகுவதாக ரஷ்யா நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.