வல்லிபுரக் கோவில் அருகில் வெடித்தது என்ன..? பொலிஸார் வெளியிட்ட தகவல்.!!

யாழ்.பருத்துறை- வல்லிபுரம் கோவிலுக்கு அருகில் வெடித்தது கிளைமோர் அல்ல. அது ஒரு சாதாரண நாட்டு வெடிகுண்டு எனவும், அதனைப் பொலிஸார் காலால் தட்டியபோதே அது வெடித்ததாகவும் கூறப்படுகின்றது. சட்டவிரோத மண் அகழ்வுகள் , மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் பொலிசார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன், குறித்த சந்திப் பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும். இந்நிலையில், இன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் வந்திறங்கியபோது, நிலத்தில் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததிலையே பொலிசார் காயமடைந்துள்ளார்.