இறைவனின் உறைவிடத்தில் அடியவர்கள் செய்யக் கூடாத செயல்கள்

ஆலயங்களுக்குச் செல்வதே நிம்மதியைத் தேடித்தான். அங்கும் முறையற்று நடந்து, தானும் நிம்மதி இழந்து மற்றவர்களையும் நிம்மதி இழக்க செய்வது சிலரின் பழக்கம்.

ஆலயங்களுக்கென்று சில விதிமுறைகள் உண்டு. அவற்றைப் பின்பற்றினால் கடவுளரும் மகிழ்வர். மற்றவர்களும் மகிழ்வர்.

இவ்வாறு சிவாலயங்களில் செய்யக்கூடாத செயல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

குளிக்காமல் செல்லக்கூடாது.

வெற்றிலை பாக்கு போடுதல்.

எச்சில் துப்புதல் கூடாது.

வீண் வார்த்தைகள் பேசுதல்.

சண்டை போடுதல்.

உறங்குதல் கூடாது.

சுவாமிக்கு நேராக கால்களை நீட்டி அமரக்கூடாது.

வழிபாட்டை அவசரமாக முடிக்காமல் நிதானமாக வழிபடுவது நன்று.

திருநீறு போன்ற பிரசாதத்தை வாங்கி தூண்கள் மற்றும் ஓரங்களில் போடக்கூடாது.

பலி பீடத்திற்கும், இறைவன் சன்னிதிக்கும் இடையே செல்லக்கூடாது.

அபிஷேகம் நடக்கும் போது உட்பிரகாரத்தில் வலம் வருதல் கூடாது.

தீபங்களையும் சூடங்களையும் வாசல்படியில் ஏற்றக் கூடாது.

அதற்குரிய இடங்களில் மட்டுமே ஏற்ற வேண்டும்.

முக்கியமாக பிறர் கண்களை உறுத்தாத ஆடைகளை அணிய வேண்டும்.

ஆலயத்திற்குள் அலைபேசிகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.