மன்னாரை உலுக்கிய கொலைச் சம்பவம் – சந்தேக நபர்கள் தொடர்பில் வெளிவந்த தகவ‌ல்

மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இரு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (11) யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு வலுப் பெற்றதையடுத்தே, நேற்று (10) கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.