மதுபான விற்பனை நிலையங்களை பூட்ட விசேட உ‌த்தரவு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) நாட்டிலுள்ள
மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் சூதாட்ட விடுதிகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.

போயா விடுமுறை தினத்தை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் சூதாட்ட விடுதிகள் ஆகியவற்றை மூடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 13ஆம் திகதியும் அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.