யாழில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த 8ஆம் திகதி கடுமையான காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

இந்த நிலையில், நேற்றைய தினம்(10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.