முகக்கவசங்கள் அணிவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

முகக் கவசங்களை தொடர்ந்தும் பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஒன்றியத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முகக் கவசங்களை அணியும் பழக்கத்தை கைவிட வேண்டாம் எனவும், குறிப்பாக உள்ளரங்க நிகழ்வுகளில் முகக் கவசங்கள் அணியுமாறும் கோரியுள்ளனர்.

வயோதிபர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தேவையின்றி சுவாசப் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடுவதனை தடுக்க இவ்வாறு முகக் கவசம் அணியுமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் முக்க் கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்த வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.