இலங்கை அவசரநிலைக்குள் தள்ளப்படும் அபாயம் – ஐ.நா வெளியிட்ட தகவல்

இலங்கை முழுமையான மனிதாபிமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளதாக ஐ.நாவின் மனிதாபிமான அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லேர்க் தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையிலேயே அவர் அந்த அபாயத்தை வெளியிட்டுள்ளார்.

எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, பணவீக்கம் மற்றும் அதன் நாணய மதிப்பின் வீழ்ச்சிக்கு மத்தியில் இலங்கையில் வாழும் 22 மில்லியன் மக்கள் மிகக் கடுமையான நிதிக் நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர்.

1948 முதல் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இது ஒரு முழுமையான மனிதாபிமான அவசரநிலையாக உருவாகலாம் என்று தாங்கள் கவலைப்படுவதாக ஜென்ஸ் லேர்க் தெரிவித்துள்ளார்.