யாழ் – பொன்னாலையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சரமாரியான கத்திவெட்டுக்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பொன்னாலையைச் சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57), பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்தனர்.
இவர்கள் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.