நீண்ட வருடம் குழந்தை பாக்கியம் இல்லையா? இந்த எளிய ஆன்மீக பரிகாரத்தை செய்தால் குழந்தை பாக்கிய தடை நீங்கும் தெரியுமா?

குழந்தை வரம் கிடைப்பதற்கு இன்று பலரும் கோவில் கோவிலாக, மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்து கொண்டிருக்கின்றனர். எச்செல்வம் கிடைத்தாலும், மழலைச் செல்வம் என்பது பெறற்கரிய பேராக மாறிப் போகிய இக்காலத்தில் ஆன்மீக ரீதியாக நீண்ட வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருப்பவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் தான் என்ன? குழந்தை பாக்கியம் பெற செய்ய வேண்டிய விஷயங்களை இந்த பதிவின் மூலம் இனி பார்ப்போம்.

திருமணமான புதிதில் ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் குழந்தை வரத்திற்காக ஏங்கி காத்துக் கொண்டிருக்கும் தம்பதியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மாதமும், ஒரு நாள் மாதவிடாய் வராமல் தள்ளிப் போனாலும், மனதளவில் பெருமளவு தவிப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கும் இந்த தவிப்பு அடங்குவதற்கு ஆன்மீக ரீதியாக நீங்கள் இதை செய்து பார்க்கலாம்.

மழலைச் செல்வம் என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. இதற்கு நாம் செய்யும் பாவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் ஒரு விதமான காரணம் தான். நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும், மற்றவர்கள் எக்கேடோ கெட்டு போகட்டும் என்று மனதில் நினைத்தாலே நமக்கு குழந்தை பாக்கியத்தை தடை செய்து விடுவார் இறைவன். எல்லோருமே நன்றாக இருக்க வேண்டும், எவருக்கும் எக்குறையும் வரக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கிறது. ஒரு பாவமும் செய்யவில்லையே என்று நீங்கள் யோசிப்பதை விட செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடிக் கொள்வது தான் நல்லது.

 

குழந்தை பாக்கிய தடை இருப்பவர்கள் எப்பொழுதும் சஷ்டியில் விரதம் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். சஷ்டியில் தொடர்ந்து முறையாக முருகனுக்கு விரதத்தை கடைபிடித்து வருபவர்களுக்கு விரைவிலேயே கரு உண்டாகும் என்பது ஆன்மீக ரீதியான மிக முக்கிய பரிகாரமாக இருந்து வருகிறது. இதை உணர்த்தவே ‘சட்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்’ என்கிற பழமொழி உதித்தது. சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும் என்பதை குறிக்கிறது இப்பழமொழி.

துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்கிற ஐதீகமுண்டு. அதே போல துர்க்கை அம்மனுக்கு இதை படைத்து வழிபட்டு வந்தால், குழந்தை பேரு உண்டாகும் என்கிற ஐதீகமும் இருந்து வருகிறது. குழந்தைப் பேறு அடைவதில் இருக்கும் சிக்கல்களை தீர்க்க, முதலில் இறைவனை மனமுருக நம்புங்கள். எக்காரணம் கொண்டும் துர்க்கை அம்மன் உங்களை கைவிடமாட்டார் என்று நம்பி இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

ராகு காலம் என்பது துர்க்கை அம்மனுக்கு மிக உகந்த ஒரு வேளையாக இருக்கிறது. ராகு கால வேளையில் துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க் கிழமையில் தக்காளி சாதத்தை செய்து கொண்டு போய் நைவேத்தியம் படைத்து வழிபடுங்கள். யாருக்கு குழந்தை இல்லையோ, அவர்களுடைய கைகளால் ருசியான தக்காளி சாதம் செய்யுங்கள். அதை துர்க்கை அம்மனுக்கு படைத்து துர்க்கை அம்மனை பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். இதை செவ்வாய்க்கிழமை, ராகு கால வேளையில் மட்டுமே செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வாருங்கள், வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை அம்மன் உண்டாக்கி விடுவார். நம்பிக்கையோடு செய்தால் தான் எல்லாவற்றுக்கும் பலன் உண்டு எனவே நம்பிக்கையோடு செய்து பயன்பெறுங்கள்.