இதை மட்டும் செய்து பாருங்கள், கஷ்டம் என்ற வார்த்தையே உங்கள் வாயில் இருந்து வராதாம்

தாந்திரிக பரிகாரங்கள் என்பது சித்தர்கள், முனிவர்கள் போன்ற தவசீலர்கள் தங்கள் வாழ்வில் வேண்டியதைப் பெற, அனுபவ ரீதியாக சோதித்து பலன் பெற்ற ஆன்மீக செயல்முறைகளே ஆகும். இத்தகைய தந்திரிக பரிகாரங்களை திட சித்தத்துடன் தொடர்ந்து செய்து வர உங்களது வாழ்வில் பல நல்ல மாறுதல்கள் ஏற்படுவதை நீங்களே உணர்வீர்கள். வாழ்வில் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வகையான தேவைகள் விருப்பங்கள் இருக்கும். அதற்கேற்றார் போல சில எளிய தாந்திரிக பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு நாம் தெரிந்துகொள்ளலாம்.

வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டிலோ அல்லது கோயில்களிலோ இருக்கும் பசு மாடுகளுக்கு அருகம் புல் உண்ணக் கொடுப்பதாலும், உங்கள் வீட்டிற்கருகில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு மூலவர் தெய்வ அபிஷேகத்திற்கு காய்ச்சாத பசும் பாலை கொடுத்து வந்தாலும், உங்கள் ஜாதகத்தில் இருக்கின்ற சுக்கிர கிரகம் பலம் பெற்று உங்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும்.

தினமும் வெளியில் செல்லும் ஆண்கள், தங்கள் நெற்றியில் மஞ்சள் பொடியை திலகமாக அணிந்து செல்ல குரு பகவான் அருள் கிடைத்து அனைத்து காரியங்களிலும் சுபமான பலன்களை பெறலாம். அதேப்போன்று வியாழக்கிழமைகளில் உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் இருக்கும் கோயில்களில் பக்தர்களுக்கு லட்டுகளை பிரசாதமாக கொடுப்பதால் குரு பலம் பெற்று வாழ்வில் நற்பலன்கள் உண்டாகும்.

தினந்தோறும் காலையில் குளித்து முடித்ததும் ஒரு சிறிய அளவிலான செம்பு பாத்திரத்தில் நீரை நிரப்பி, சூரிய பகவானை மனதில் நினைத்து, அவருக்கு நைவேத்தியமாக வீட்டில் துளசி மாடத்திற்கு அருகில் அந்த செம்பு பாத்திரத்தை வைக்க சூரிய பகவானின் அருட் கடாட்சம் கிடைக்கச் செய்யும்.

வீட்டில் பள்ளி படிக்கும் வயதில் இருக்கின்ற குழந்தைகள் தினந்தோறும் சரஸ்வதி மந்திரம் அல்லது குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலை தோத்திரங்களை படிக்க செய்வதால் புத பகவானின் அருள் கிடைத்து, கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இரவில் பச்சைபயிறு சிறிதளவு நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதை கோயில்களில் இருக்கின்ற புறாக்களுக்கு உணவாக இடுவதால் புதன் கிரக தோஷங்கள் நீங்கும்,

பசு மாட்டின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்து வருவதால் வீட்டில் இருக்கின்ற பீடைகள் அகலும். மேலும் கோமியத்தின் சில துளிகளை நீங்கள் குளிக்கின்ற நீரில் கலந்து, குளித்து வந்தால் துரதிர்ஷ்டங்கள் நீங்கி, லட்சுமி கடாட்சம் உண்டாகி செல்வம் பெருகத் தொடங்கும். ஆஞ்சநேயரை தினந்தோறும் வணங்குபவர்களுக்கு சனி கிரக பாதிப்புகள் குறையும்.

இரும்பு உலோகத்திற்கு காரகத்துவம் கொண்ட கிரகம் சனிபகவான் ஆவார். சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சனிபகவானின் தீய பார்வை ஏற்பட்டு வாகன பராமரிப்பிற்காக அதிக பண விரயம் ஏற்பட வழிவகுக்கும். பொதுவாக விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட பர்ஸ், பெல்ட், செருப்பு போன்றவற்றை பயன்படுத்துவதை அறவே தவிர்த்தால் சனிபகவானால் ஏற்படும் தீய பலன்களை தடுக்கலாம்.

தொடர்ந்து 16 நாட்களுக்கு ஏதேனும் கோயிலுக்கு கொள்ளு தானியங்களை தானமாக கொடுத்து வந்தால் உங்கள் ஜாதகத்தில் கேது கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். பொதுவாக அனைவரும் அடர்ந்த நீலம் மற்றும் அடர்ந்த பச்சை நிற ஆடைகளை அணிவதை தவிர்ப்பது நலம்.