வளிமண்டலத்தில் பெரும் குழப்பம்..!! இலங்கையின் பல பகுதிகளிலும் அடை மழை..!!

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்து வருவதாகவும் இந்த நிலை மேலும் அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.கேகாலை, இரத்தபுரி, களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழை பெய்யும். ஏனைய பிரதேசங்களில் இடைக்கிடையே மாலை 2 மணிக்கும் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும்.நாட்டின் ஊடாக காற்று மணிக்கும் 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.