சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் துறையின் இயக்குனராக இந்தியர் நியமனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் துறையின் இயக்குனராக கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனராக இருந்த சான்கியாங் ரீ, கடந்த மாதம் ஓய்வுபெற்ற நிலையில், அந்த அப்பதவிக்கு தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன், இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜியவா நேற்று இதனை அறிவித்துள்ளார்.

இந்திய பொருளாதார நிபுணரான கிருஷ்ணா சீனிவாசன், டெல்லியில், பொருளாதாரத்தில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளை முடித்துள்ளதுடன், சர்வதேச நிதியத்தில் 27 ஆண்டுகள் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.