கிளிநொச்சியில் இப்படியொரு இளைஞனா…!! அசந்து போன புலம்பெயர் நாட்டவர்

கிளிநொச்சி – புதுமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை தவக்குமார் என்ற இளைஞன் செய்த நேர்மையான செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கிளிநொச்சி – திருவையாறு பகுதியில், தவறவிடப்பட்ட 4 லட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியினை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

புலம்பெயர் நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர், கிளிநொச்சியில் உள்ள கிராமிய பாடசாலை ஒன்றுக்கும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கும் உதவி செய்யும் பொருட்டு கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன் போது அவர், 4 இலட்சம் ரூபாய் பெறுமதியாக கையடக்க தொலைபேசியினை தவறவிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த தொலைபேசியினை கண்டெடுத்த தவக்குமார், அதனை உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.

இளைஞனின் இச்செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கையில் கொண்டுசெல்லும் பொருட்களையே பறித்துச் செல்லும் சம்பவங்கள் பதிவாகி வரும் சூழலில், இளைஞனின் செயல் உரிமையாளரை அதிசயிக்க வைத்துள்ளது.