யாழ்ப்பாணத்தில் பதிவான துயர சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இரு குடும்ப பெண்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதங்கேணி உடுத்துறை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் பிறேமலதா (வயது 43) என்பவர் கடந்த 08ஆம் திகதி தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் சென். சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் கற்பித்து வந்த நிலையில், சுகவீனம் காரணமாக ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் என உறவினர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுதாகரன் துளசிகா (வயது 28) என்பவர் கடந்த 6ஆம் திகதி தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 8ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.