அரச ஊழியர்களுக்கு விசேட அறிவித்தல்

எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அரச துறைக்கான சிறப்பு விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுப் போக்குவரத்து மற்றும் அலுவலக செயற்பாடுகளை பராமரித்தல் தொடர்பான பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால், அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த விடயங்களின் அடிப்படையில் ஜூன் 13ஆம் திகதி திங்கட்கிழமை அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.