வீதியின் ஓரத்தில் சிசுவின் சடலம் மீட்பு

நுவரெலியா – லிந்துலை பகுதியில் 06 மாத சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, வலகா தோட்டத்திற்குச் செல்லும் வீதியின் ஓரத்தில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் சென்ற சிலர் சிசுவின் சடலத்தை அவதானித்து லிந்துலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 6 மாத காலம் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படும் சிசுவின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ள நிலையில், சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.