கல்லறைக்குச் சென்றாலும் ரகசியம் காப்பவர்கள் யார் தெரியுமா..!!

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சில நிகழ்வுகள் நடந்திருக்கும். அதை ரகசியமாக வைக்க வேண்டியதாகவும் இருக்கும்.

நம்முள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் ரகசியத்தை எல்லாம் போத்தல்களில் அடைத்து வைப்பது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததல்ல.

யாரிடமாவது சொன்னால் தான் நம் மனம் சாந்தி அடையும் என்ற நிலை பலருக்கு உண்டாகும்.

ஜோதிட சாஸ்திரப்படி, எந்த ஒரு ராசியினர் ரகசியத்தைத் தான் கல்லறைக்கு செல்லும் வரை காக்கக்கூடியவராக இருப்பார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

வதந்திகளுக்கு எப்படி அழிக்கும் சக்தி கொண்டது என்பதை சிம்ம ராசிக்காரர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். எனவே அவர்கள் ஒருவரின் ரகசியங்களை வெளியே சொல்ல மாட்டார்கள்.

விசுவாசமானவர்கள், கனிவானவர்கள், நம்பிக்கையானவர்கள் என சிம்ம ராசியினரை கூறிக்கொண்டே போகலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் ரகசியத்தைப் போல பிறரின் ரகசியங்களை காப்பதில் அக்கறையுடன் செயல்படுவார்கள்.

ஒருவரின் நம்பிக்கையை அழிப்பது துரோகம் என நினைக்கக்கூடிய சிம்ம ராசியினர் எந்த ஒரு நிலையிலும் ரகசியத்தை வெளியிடுவதில்லை.

மீனம்

மீன ராசியினரிடம் இது ரகசியம், யாரிடமும் சொல்ல வேண்டாம் என சொன்னால் அதை வெளியே சொல்ல வேண்டும் என நினைப்பார்கள்.

மற்றபடி எந்த விஷயத்தை வெளியே சொல்லலாம், எந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என அறிந்து நடக்கக்கூடியவர் மீன ராசியினர்.

மற்றவர்களின் மனதைப் புரிந்து நடந்து கொள்ளக்கூடியவர்கள் மீன ராசியினர் என்பதால், இவர்களை நம்பி எந்த ஒரு விஷயத்தையும் சொல்லலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் ரகசியம் காப்பதில் கிங். இவர்களை நம்பி நீங்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால், அவர்கள் ஒருபோதும் மற்றொருவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் ரகசியத்தை, ரகசியமாகக் காப்பார்கள்.

உங்கள் நம்பிக்கையை என்றென்றும் நிலைநிறுத்துவார்கள்.

பொதுவாகவே விருச்சிக ராசியினர் எந்த ஒரு விஷயத்தையும் ரகசியமாகவே செய்வார்கள். அவர்களின் நடவடிக்கையைக் கணிப்பது கடினம்.

அந்த ரகசியத்தை காக்கக்கூடியவர்களாகவும், மற்றவர்களுக்கு நம்பிக்கையான நபராக விருச்சிக ராசியினர் இருப்பார்கள்.

ரிஷபம்

ரகசியத்தை காப்பதன் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள் ரிஷப ராசியினர். நாம் ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கும், நம் நம்பிக்கை பெற பல்வேறு காரணங்கள் இருக்கும்.

இவை அனைத்தும் சேர்ந்தவராக ரிஷப ராசியினர் இருப்பார்கள்.

மற்றவர்களின் மனக்குறை, மன பாரத்தை பொறுமையாக கேட்பதோடு, அதற்கான உதவியை செய்வார்கள்.

மேலும் அந்த விஷயங்களை ரகசியமாகக் காப்பார்கள்.
மற்றவர்கள் அதை அறிந்து கொள்ள நினைத்தாலும் ரகசியத்தை அப்படியே வைத்திருப்பார்கள்.

இரும்புக் கோட்டை போன்ற மனம் கொண்ட இவர்களிடமிருந்து ரகசியம் வெளியேற வாய்ப்பில்லை.

கன்னி

கன்னி ராசியினர் ரகசியத்தை காப்பதில் சிறப்பானவர்கள். ஆனால் அவர்கள் உங்களுக்காக வந்து உதவ நினைக்கமாட்டார்கள்.

கடந்த காலத்தில் நடந்த ஏதேனும் ஒரு விஷயத்தை ரகசியமாக இருக்க வேண்டும் என நினைத்தால், அது வெளியில் கொண்டு வரமாட்டார்கள்.

மற்றவர்களின் உணர்வைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களாகவும், சிக்கலைத் தீர்க்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

கன்னி ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மட்டுமல்ல, நம்பகமானவர்கள் மற்றும் நம்பிக்கையானவர்கள்.

சில விஷயங்கள் எப்போதும் தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை கன்னி ராசிக்காரர்கள் புரிந்து வைத்திருப்பார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் யாரோ சொன்ன ரகசியத்தை வெளிப்படுத்த மாட்டார்கள் என்பது மட்டுமல்லாமல், அந்தத் தகவலை யாருக்கும் எதிராக, குறிப்பாக வியாபார நோக்கிலோ அல்லது தனக்கு சாதகமாகவோ பயன்படுத்த மாட்டார்கள்.

மகர ராசிக்காரர்களின் செயல்களில் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க விரும்புவார்கள்.

புத்திசாலித்தனமானவர்கள் என்றாலும், மற்றவர்களின் ரகசியத்தை வெளியில் சொல்லி நம்பிக்கை துரோகம், ரகசியத்தை துஷ்பிரயோகம் செய்யமாட்டார்கள்.

எப்படி நம் பிரச்னையை மருத்துவர், வழக்கறிஞரிடம் நம்பி சொல்கின்றோமோ அதே போல மகர ராசியினர் செயல்படுவார்கள்.