மன்னாரில் கொடூர வாள்வெட்டு – சம்பவ இடத்தில் ரத்த வெள்ளம்!! 2 பேர் பலி

மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (10) காலை இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் என்று தெரியவந்துள்ளது.

சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.