நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா.!! மொத்த எண்ணிக்கை 1278 ஆக உயர்வு..!!

UPDATE:இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரித்துள்ளது.இன்றுமட்டும் 96 பேர் புதிய நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் வைத்தியசாலைகளில் 556 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.UPDATE: கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,209 ஆக அதிகரித்துள்ளது.இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட 24 பேரில் 19 பேர் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் 5 பேர் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.UPDATE : கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக அதிகரித்துள்ளது.அந்தவகையில் இன்றுமட்டும் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.