முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கறுப்பு பட்டி அணிவிப்பு

வன்முறையாளர்கள் சிலரால் நிட்டம்புவையில் கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அந்த கட்சியை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கறுப்பு பட்டியை அணிந்து நாடாளுமன்ற அவைக்குள் வந்திருந்தனர்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கறுப்பு பட்டியை அணிந்து அவையில் அமர்ந்திருப்பதை காணக் கூடியதாக இருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீத பண்டார தெ்னனகோன், மகிந்த ராஜபக்சவின் கையில் கறுப்பு பட்டியை கட்டி விட்டுள்ளார்.

அமரகீர்த்தி அத்துகோரள கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவையில் நடந்த வன்முறை சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.