துவிச்சக்கரவண்டியில் சென்ற சேத்துக்குடாவை சேர்ந்த ஒருவர் மீது வாள் வெட்டு! தப்பி ஓடிய நால்வர் கைது!

மட்டக்களப்பு பிரதேசத்தில் கடந்த 20ஆம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்ற சேத்துக்குடாவை சேர்ந்த ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய 4 பேரை நேற்று வியாழக்கிழமை கைது செய்ததாக மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 20ஆம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரை பழைய பகை காரணமாக 6 பேர் கொண்ட குழுவினர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளனர்.

 

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த 22,35,45,40 வயதுடைய நான்கு பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.