ஆசிய நாடான தாய்லாந்தில் முதன்முதலாக கஞ்சாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் தாய்லாந்து அரசு சட்டபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் கஞ்சாவுக்கு சட்ட அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடாக தாய்லாந்து பதிவாகியுள்ளது.
இதுவரை உலக அளவில் உருகுவே மற்றும் கனடா ஆகிய நாடுகள் மட்டுமே கஞ்சாவுக்கு சட்ட அனுமதி வழங்கியுள்ளன.
கஞ்சாவிற்கு தீவிர தேவை எழுந்துள்ள நிலையில், வேளாண்மை மற்றும் சுற்றுலாவை வளர்க்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தாய்லாந்து அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை பயன்படுத்த தாய்லாந்து 2018ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.
இனி கடைகளில் குளிர்பானங்கள், இனிப்புகள் மற்ற இதர பொருள்களில் கஞ்சாவை கலந்து விற்கவும் தாய்லாந்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொதுவெளியில் கஞ்சா புகைக்க அந்நாட்டு அரசு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.
மருத்துவ நலன்களை கருத்தில் கொண்ட கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறிய தாய்லாந்து அரசு, பொதுவெளியில் இதனை பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டால் மூன்று மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.