இலங்கைக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில் இலங்கைக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமது கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் வரை, இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் சமாகால நிதியியல் தொடர்பான செயற்பாடுகள் ஆராயப்படவுள்ளன.

இதற்கான அதிகாரி ஒருவரை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிதித் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர் கடனை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

எனினும் இலங்கை இன்னமும் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.