அதிவிசேட வர்த்தமானி மூலம் புதிய அமைச்சுகள் உருவாக்கம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சு, அதனுள் உள்ளடங்கும் விடயங்கள் தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழிநுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகியன உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த அமைச்சுகளின் கீழ் உள்ளடங்கும் திணைக்களங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்கள் தொழிநுட்ப மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த, ஸ்ரீலங்கா டெலிகொம், தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, தேசிய முதலீட்டுச் சபை, ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், துறைமுகநகர் பொருளாதார திணைக்களம், தரக்கட்டளை நிறுவகம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவகம் (ICTA), தாமரைக் கோபுரம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.