நிலக்கடலை சாப்பிடுவதால் கொழுப்பு சத்து அதிகரிக்குமா? வாங்க என்னவென்று பார்க்கலாம்

நிலக்கடலையில் ஒமேகா-3 சத்து நிறைந்துள்ளது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தம்மை இளமையையும் பராமரிக்க உதவுகிறது. நிலக்கடலை சாப்பிடுவதால் கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்று செல்கிறார்கள்.

நிலக்கடலை பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை சீரக வைக்க உதவுகிறது இதன் மூலம் மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. நிலக்கடலையில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிறைந்துள்ளது.

நிலக்கடலையை தினம் 30 கிராம் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்கும். பெண்களுக்கு எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாக்க நிலக்கடலை உதவுகிறது.

நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் சத்து நிறைந்துள்ளது இது உடல் எடை அதிகமாகாமல் இருக்க உதவுகிறது. நிலக்கடலை இதய வால்வுகளை பலப்படுத்துகிறது அதனுடன் இதய நோய் வராமல் தடுக்கிறது.

வேர்க்கடலையில் பாதாமைவிட நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளது. வேர்க்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகமாக்குகிறது.