தீராத கண் திருஷ்டி கழிய நமக்கு நாமே செய்து கொள்ள வேண்டிய பரிகாரம் என்ன தெரியுமா?

கண் திருஷ்டி என்பது ஒரு பொல்லாத திருஷ்டி ஆகும். கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணாடி மட்டும் பட்டுவிடக் கூடாது என்று நம் முன்னோர்கள் கூறக் கேட்டிருப்போம். கல்லால் அடிக்கும் வலியை விட ஒருவர் நம்மைப் பார்த்து பொறாமைப்படும் போது ஏற்படக்கூடிய விளைவுகள் அதிகமானதாக இருக்கிறது. இதற்காக நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, எதையும் ஒளித்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. திருஷ்டிகள் கழிவதற்கு நிறையவே பரிகாரம் உண்டு. அவற்றில் இந்த பரிகாரம் நமக்கு நாமே செய்து கொள்ளக் கூடிய அற்புதமான திருஷ்டி பரிகாரம் ஆகும். அது என்ன? எப்படி செய்ய வேண்டும்? என்பதை இனி பார்ப்போம்.

பொதுவாக வாரம் ஒரு முறையாவது குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் கிழக்கு நோக்கி அமர வைத்து குடும்ப மூத்தவர்கள் கையில் கல் உப்பு, மிளகாய் வற்றல், கடுகு, கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து வலது புறம் மூன்று முறையும், இடது புறம் மூன்று முறையும் சுற்றி அதை ஒரு பேப்பரில் மடித்து எரித்து விடுங்கள்.

இதைச் செய்யும் போது உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு ஓரத்தில் செய்ய வேண்டும். நடுரோட்டில் செய்தால் அதை மிதிப்பவர்களுக்கும் திருஷ்டிகள் சென்றடையும் என்பதால் பொது நலமாக கவனத்துடன் செயல்பட வேண்டும். வற்றலின் நெடியும், பொரியும் கடுகின் வாசமும் நம்மை சுற்றி இருக்கும் எப்பேர்பட்ட துர்சக்திகள் மற்றும் திருஷ்டிகளை அழித்து விடும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அது போல எலுமிச்சை பழத்தை பாதி அளவிற்கு இரண்டாக வெட்டி அதனுள் கற்பூரம் ஒன்றை வைத்து சூடம் ஏற்றி பாதிக்கப்பட்ட நபரை கிழக்கு நோக்கி அமர வைத்து இதே போல மூன்று முறை வலது புறமும், இடது புறமும் என்று சுற்றி வெளியில் கொண்டு போய் கற்பூரத்தை போட்டுவிட்டு கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக பிரித்து வலது கையில் இருப்பதை இடது புறமும், இடது கையில் இருப்பதை வலது புறமும் தூக்கி எறிந்து விட வேண்டும். இதனால் எந்த திசையில் இருந்து உங்களுக்கு திருஸ்டிகள் வந்திருந்தாலும் அவை முற்றிலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

இந்த வகையில் நம்மை நாமே சுற்றிக் கொள்ள வேண்டிய ஒரு திருஷ்டிக்கு உரிய பரிகார பொருளாக இருப்பது ‘அடுப்புக்கரி’. இந்த அடுப்புக்கரியை ஒரு துண்டு அளவிற்கு எடுத்து கையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தலையை சுற்றி வலது புறம் மூன்று முறையும், இடது புறம் மூன்று முறையும் திருஷ்டி கழியுங்கள். அதன் பிறகு கையில் இருக்கும் கரிக்கட்டை கண்களால் பார்க்காமல் அப்படியே மூடி கொண்டு போய் ஏதாவது ஒரு இடத்தில் தூக்கிக் போட்டுவிட்டு வந்து விடுங்கள்.

 

பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவி விடுங்கள். இப்படி உங்களுக்கு உங்களுடைய தன்னம்பிக்கை குறையும் பொழுது, மன வலிமை மற்றும் சக்தி குறையும் பொழுது செய்து பாருங்கள் நிச்சயம் உங்களை பிடித்திருக்கும் எப்பேர்பட்ட கண் திருஷ்டியும் உங்களை விட்டு நீங்கி விடும். இதனால் உங்களை பார்த்து இனி யாரும் பொறாமை படமாட்டார்கள். கண் திருஷ்டி வைக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கையும் அதிகரிக்கத் துவங்கும், ட்ரை பண்ணி பாருங்க.