அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் திடீர் மரணம்..!! பெரும் அதிர்சியில் மலையகத் தமிழ் மக்கள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்றிரவு காலமானார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அமைச்சர் வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.