யாழில் கோர விபத்து! இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி (Photos)

யாழ்ப்பாணம் – அரியாலை – நெடுங்குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

சற்றுமுன் வீதியைக் கடக்க முற்பட்ட கார் மீது புகையிரதம் மோதியதால் விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்த இருவரும் இளைஞர்கள் என்பதுடன், அவர்களது விபரங்கள் இன்னும் தெரியவரவில்லை.


பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.