வவுனியா பல்கலை அருகில் தீ விபத்து

வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள காணியில் தீ விபத்து ஏற்பட்டதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 11.30 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின் தீயினை முற்றாக அணைத்திருந்தனர்.

இதன் மூலமாக பல்கலைக்கழக வளாகத்தினுள் தீ பரவும் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.