நாளை முதல் இலங்கையில் புதிய நடைமுறை

இனிவரும் நாட்களில் இலங்கையில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு இன்று(9) வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக் கவசம் அணிவது இனி கட்டாயமில்லை எனவும், சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் முகக் கவசம் அணிவதற்கு சுகாதார அமைச்சு பரிந்துரைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்தத் தடையும் இன்றி அதனை அணிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முகக் கவசம் அணியும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.