லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்

இன்றைய தினமும் (9) நாடளாவிய ரீதியாக சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே, 12.5 கிலோ கிராம், 5 கிலோம் கிராம மற்றும் 2.3 கிலோ சயைமல் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக் கொள்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு அருகாமையில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.

கடந்த நாட்களில், சமையல் எரிவாயு கொள்கலனை பெற்றுக் கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த மக்கள் நேற்றைய தினமும் வரிசையில் காத்திருந்தனர்.

இந்த நிலையில், வீண் அலைச்சலை தவிர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.