பசில் ராஜபக்ஷ எடுத்த அதிரடி முடிவு

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்துக்கமைய, கடந்த 2021 ஜூலை 7 ஆம் திகதி நான் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன், ஜனாதிபதியினால் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டேன்.

கடந்த ஏப்ரலில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுடன் நானும் பதவி விலகினேன் என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக தகுதிவாய்ந்த ஒருவரை நாடாளுமன்றுக்கு தெரிவுசெய்வதற்கு வழிவகுக்கும் வகையில் தான் பதவி விலகுவதாக தெரிவித்தார்.