முல்லைத்தீவில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்லாவி 4ஆம் யூனிட் திருநகர் பகுதியில் நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஆறு பேர் காயமடைந்து மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட நிலையில் அதில் இருவர் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், ஏனைய நால்வரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.