22 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

22,000 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள மாகாணப் பாடசாலைகளில் 8000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முதல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

அண்மையில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை வெற்றிடங்களுக்கு நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அதற்கமைவாக பயிற்சிகளை வழங்கி அவர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் கூறினார்.