நெருங்கிய உறவினர்கள் மூவரால் சீரழிக்கப்பட்ட சிறுமி

மொணராகலை – எத்திமலே பகுதியில் 13 வயதான சிறுமி ஒருவர், அவருடைய தாத்தா, தாய் மாமா மற்றும் மூத்த சகோதரன் ஆகியோரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

13 வயதுடைய மாணவி வயிற்று வலிக்காக வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் கர்ப்பம் தரித்திருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையின்போது, தன்னை, தனது தாத்தா, மாமா மற்றும் மூத்த சகோதர் ஆகியோர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததாக சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்து, அவரின் சகோதரனை கைது செய்த பொலிசார், அவரது தாத்தா மற்றும் மாமாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.