நீங்க தொட்ட காரியம் எல்லாம் வெற்றி பெற, வெறும் 11 ரூபாய் உங்கள் கையில் இருந்தால் போதும்…எல்லாமே வெற்றிதான்

நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் வெற்றி கிடைத்தாலே போதும். அது நமக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை கொடுத்து விடும். அதுவே முயற்சிகளில் தோல்வி அடையும் போது நம்மால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாதா என்ற தாழ்வு மனப்பான்மை நம்முடைய வாழ்க்கையில், நம்மை இன்னும் பின்னுக்கு தள்ளிவிடும். எடுத்த முயற்சி எல்லாம் வெற்றி அடைய வேண்டுமென்றால் அதற்கும் ஒரு பரிகாரம் நம் கையில் இருக்க வேண்டுமல்லவா. அதற்காக ஒரு சிறிய பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பரிகாரத்திற்க்கு நமக்கு தேவை வெறும் 11 ரூபாய் மட்டும் தான். வீட்டில் இருந்து நீங்கள் ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக கிளம்புகிறீர்கள். இன்டர்வியூக்காக இருக்கலாம், அல்லது திருமணத்திற்காக வாழ்க்கைத்துணையை பார்க்கச் செல்வதாக இருக்கலாம். காண்ட்ராக்டில் கையெழுத்து இடுவதற்கு செல்லலாம். அப்படி இல்லை என்றால் வேறு ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக செல்கிறீர்கள். சொத்து வாங்குவதற்காக கூட செல்லலாம். அந்த நல்ல காரியம் உங்களுக்குக் கைகூடி வர வேண்டும். அந்த நல்ல காரியம் உங்களுக்கு வெற்றியை தர வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்.

வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது ஒரு 11 ரூபாயை எடுத்து ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும். எந்த இடத்தில் வைத்தாலும் சரி. ஆனால், வீட்டில் இருப்பவர்கள் பார்த்து இந்த காசு எதற்கு என்று கேட்கக் கூடாது. அந்த அளவிற்கு யார் கண்ணுக்கும் தெரியாமல் பீரோவில் துணி மணிகள் அடியில் ஒளித்து வைத்தால் கூட சரிதான்.

அவ்வளவு தான். உங்களுடைய வேலைக்கு வழக்கம் போல நீங்கள் செல்லலாம். நிச்சயமாக நீங்கள் எந்த முயற்சியை மேற்கொள்ள வெளியே செல்கிறீர்களோ, அந்த காரியம் உங்களுக்கு வெற்றி அடையும். வீட்டிற்கு திரும்புவீங்க. அடுத்தநாள் அந்த 11 ரூபாய் என்ன செய்வது. அதை எடுத்து யாருக்கும் தானமாக கொடுக்க வேண்டும். அதாவது வீதியில் யாராவது ஏழைகள் இருப்பார்கள் அல்லவா. அவர்களுக்கு இந்த பதினோரு ரூபாயை தானமாக கொடுத்து விடுங்கள்.

இந்த பதினோரு ரூபாயை எடுத்து வைக்கும்போது நான் செல்லும் காரியம் வெற்றி அடைந்தால் தான் இந்த ரூபாயை தானம் கொடுப்பேன் என்று எல்லாம் நினைக்கக்கூடாது. நாம் செல்லக்கூடிய காரியம் வெற்றி அடைந்தாலும் சரி, வெற்றியடையவில்லை என்றாலும் சரி, அந்த ரூபாயை நமக்கு சொந்தமில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை சூழ்நிலை காரணமாக நீங்கள் செல்லக்கூடிய காரியம் உங்களுக்கு சக்சஸ் கொடுக்கவில்லை என்றாலும், அடுத்த ஒரு சில நாட்களில் உங்களுக்கான நல்ல வாய்ப்பு வேறு ஒரு ரூபத்தில் தேடி வரும். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா மனநிறைவோடு சேர்ந்த வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.