நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

நாட்டின் பல பகுதிகளில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தொழிற்சங்கங்கள் நேற்றிரவு ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர். எனினும், தற்போது நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட மின்சார சபை பொறியிலாளர்கள் தீர்மானித்திருந்தனர். எனினும், ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனிடையே, மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நேற்றிரவு வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.      .