நள்ளிரவு வெளிவந்த விசேட வர்த்தமானி அறிவித்தல்

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

நள்ளிரவு (8) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

நேற்று(8)நள்ளிரவு முதல் தமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில் மின்சார சபை பொறியிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.