ஜப்பானில் இலங்கையர் வெட்டிக் கொலை!!

ஜப்பானில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையி்ல், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பான் – டோக்கியோவின் வடகிழக்கில் உள்ள ப்ரிபெக்சர் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாண்டோ நகரில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தில், பணியாளர்கள் மத்தியில் சண்டை ஏற்பட்டதை அடுத்தே இந்த மரணம் நிகழ்ந்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

45 வயதுடைய இலங்கையர் ஒருவரே, காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு மரணமானார்.

சம்பவ இடத்தில் இரத்தக்கறை படிந்த கத்தியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.