14 வயது சிறுமியை காணவில்லை!! விடுக்கப்பட்டுள்ள அவசர உதவி

14 வயது சிறுமி ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டி – கலஹா, தெல்தோட்டை பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டார் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0775251791, 0787910688 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு, அச்சிறுமியின் குடும்பத்தால் பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.