சில நிமிடங்களுக்குள் மேலும் சடுதியாக அதிகரித்த கொரோனா….!

இணைப்பு:2இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1201ஆக அதிகரித்துள்ளது.ஏற்கனவே 1199 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டார்.

இணைப்பு:1கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்கள் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1199 ஆக அதிகரித்துள்ளதோடு 477 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் 712 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அத்துடன் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் குவைட் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.சற்று முன்னர் 7 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது