வீட்டில் குடிகொண்ட வறுமையை விரட்டி அடிக்க..!!! சுலபமான பரிகாரம்

வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடிக்க வாசம் நிறைந்த 2 ஏலக்காய்கள் போதும். வாசலில் நிற்கும் மகாலட்சுமி வீட்டிற்குள் வந்து நிரந்தரமாக தங்கி விடுவாள் என ஜோதிடம் கூறும்.

இருந்தாலும் எம் தலையை மீறி வரக்கூடிய பணக் கஷ்டத்தை தவிர்க்க என்ன செய்வது, என பலரும் யோசிக்கக்கூடும். இதற்கு ஒரு சுலபமான பரிகாரம் சொல்கிறது ஜோதிடம்.

செலவில்லாமல் வெறும் இரண்டு ஏலக்காய்களை வைத்தே இந்தப் பரிகாரத்தை சுலபமாக செய்து கொள்ளலாம்.

காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு எப்போதும் போல விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு ஏலக்காய்களை எடுத்து நிலை வாசற்படிக்கு அருகில் செல்லுங்கள். நிலை வாசல் பக்கத்திலும் இரண்டு தீபங்கள் ஏற்றி வைத்து விடுங்கள். இந்த விளக்கிற்கு அருகிலேயே அமர்ந்து இரண்டு ஏலக்காய்களை கையில் வைத்துக்கொண்டு கிரக லட்சுமி, மகாலட்சுமி, குலதெய்வம், இவர்களை மனதார வேண்டிக்கொண்டு அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் வரும்படி பிரார்த்தனை செய்து கொண்டு, கையில் இருக்கும் ஏலக்காய்களை அப்படியே வீட்டிற்குள் பூஜை அறைக்கு எடுத்து வாருங்கள்.

பூஜை அறையில் அமர்ந்து ஒரு சிவப்பு நிறத் துணியில் இந்த இரண்டு ஏலக்காய்களை வைத்து முடிச்சு போட்டு இதை அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.

அவ்வளவு தான். நிலை வாசலில் இருக்கக்கூடிய தெய்வங்களை இந்த ஏழைக்காய்களின் மூலம் வசப்படுத்திக் கொண்டு வந்து நம் வீட்டு பணப்பெட்டியில் வைத்து விடலாம்.

நல்ல வாசம் நிறைந்த தெய்வ கடாட்சம் நிறைந்த இந்த ஏலக்காய்க்கு நல்ல தேவதைகளை நல்ல சக்தியை குறிப்பாக செல்வ வளத்தை வசியம் செய்யக்கூடிய தன்மை நிறையவே இருக்கின்றது.

உங்களுக்கு இவ்வளவு பெரிய பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றாலும் சரி, இரண்டு ஏலக்காய்களை கையிலெடுத்து மனதார மகாலட்சுமி பிரார்த்தனை செய்து கல்லாப் பெட்டியில் உள்ளே, பணப் பெட்டியில் போட்டு வையுங்கள். நடக்கும் மாற்றத்தை உங்களால் நம்பவே முடியாது.

இந்தப் பரிகாரத்தை எந்த நேரத்தில் எந்தக் கிழமையில் செய்தாலும் தவறு கிடையாது. முடிந்தால் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு செய்வது சிறப்பு.

வீட்டுப் பெண்களின் கையால் இந்தப் பரிகாரத்தை செய்வது அதிசிறப்பு. அப்படி இல்லை என்றால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுடைய கையில் இந்தப் பரிகாரத்தைச் செய்ய சொல்லுங்கள்.