கொழும்பு கழிப்பறைக்குள் வியக்கவைக்கும் அனுபவம் – இளைஞனின் அசத்தலான முயற்சி

கொழும்பு – புறக்கோட்டையிலுள்ள பொதுக் கழிப்பறை ஒன்றில் ஏற்பட்ட மாற்றம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த கழிப்பறையை அழகான இடமாக மாற்றிய இளைஞன் ஒருவர் தொடர்பிலும் தகவல் வைரலாகி வருகிறது.

சப்ரான் எனும் இளைஞனின் முயற்சியால் பொதுக் கழிப்பறை அலுவலக இடம்போன்று காட்சியளிக்கிறது.

புறக்கோட்டை, சாமஸ் பகுதியில் கார் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள பொதுக் கழிப்பறை கடந்த சில வருடங்களுக்கு முன்னர், கதவுகள் உடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் அதனைச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, அலுவலகம் போன்று மாற்றியமைத்துள்ளார்.

அங்கு சென்ற பெண் ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து, அந்த இளைஞனின் முயற்சிக்கு தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு பதிவிட்டுள்ளார்.

இதன்காரணமாக, சப்ரான் என்ற இளைஞனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.