எரிவாயுவுடன் இன்று இலங்கை வந்த கப்பல்

எரிவாயு ஏற்றிக் கொண்டு கப்பலொன்று இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று வருகை தந்திருக்கும் கப்பலில் 3900 மெட்ரிக் தொன் எரிவாயு நிரப்பப்பட்டுள்ளது. தற்போதைக்கு எரிவாயு இறக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இன்றையதினம் லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளைய தினம் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இன்றைய கப்பலில் எடுத்து வரப்பட்டிருக்கும் எரிவாயு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே விநியோகிக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.