மக்களுக்கு இலவச மண்ணெண்ணெய் விநியோகம்

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரினால் இலவச மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மின்சார இணைப்பு பெறாத வசதியற்ற குடும்பங்கள், வறிய குடும்பங்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வீட்டுத் தேவைக்காக இலவசமாக மண்ணெண்ணை வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக இன்று(08) காலை குச்சவெளி பிரதேச சபையின் புல்மோட்டை உப அலுவகத்தில் வைத்து, புல்மோட்டை பயன்பாடுகளுக்கான மண்ணெண்ணெய் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ்.ஏ.சீ.எம்.நசார், ஏ. பஸ்மீர், புல்மோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், இராணுவ உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.