எலுமிச்சை வேக வைத்த நீரை குடிச்சு பாருங்க… அசந்து போயிடுவீங்க..

எலுமிச்சை விட்டமின் சி அதிகம் நிறைந்த ஒரு புளிப்புச் சுவைமிக்க ஆரோக்கியமான பழம் என்பதை அனைவருமே அறிவோம்.

இந்த எலுமிச்சையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் நன்கு சுவையாக இருப்பதோடு, உடலுக்கு பல நன்மைகளையும் வழங்கக்கூடியது.

முக்கியமாக எலுமிச்சை செரிமான பிரச்சினைகளைப் போக்கவும், தாகத்தைத் தணிக்கவும் பெரிதும் உதவுகிறது.

எலுமிச்சை ஆரோக்கியமானது என்பதால், இதை அடிக்கடி தங்களின் உணவில் சேர்க்க மறக்கமாட்டார்கள்.

எலுமிச்சையின் சாற்றில் மட்டும் சத்துக்கள் இருப்பதில்லை, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெற, எலுமிச்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்நீரைக் குடிக்க வேண்டும். எலுமிச்சை வேக வைத்த நீர் பல நோய்களை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியுமா?

எலுமிச்சையில் விட்டமின் ஏ, விட்டமின் சி மட்டுமின்றி, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பொஸ்பரஸ் மற்றும் ஃபோலேட் அமிலம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன.

இது தவிர, எலுமிச்சை உடல் எடையைக் குறைப்பதிலும், சிறுநீரக கற்களைக் கரைப்பதிலும் பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பதிவில் நாம் எலுமிச்சை வேக வைத்த நீரை குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

எலுமிச்சை நீரை தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் பாதி எலுமிச்சையை வெட்டி போட்டு, சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்த பிறகு இறக்கி குளிர வைத்து, தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இந்த எலுமிச்சை நீரை காலையில் எழுந்ததும் கோப்பி, டீக்கு பதிலாக குடிக்கலாம்.

இருப்பினும், அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸை குடிப்பது சரும அழற்சி மற்றும் அரிப்பை உண்டாக்கும்.
எனவே இந்த பானத்தை தினமும் குடிப்பதாக இருந்தால், மருத்துவரை ஆலோசித்த பின்னர் தொடங்குங்கள்.