நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு! பெருமளவு நெல்லை கொள்வனவு செய்யும் செல்வந்தர்கள்

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் செல்வந்தர்கள் பெருமளவு நெல்லை கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பரவி வரும் வதந்திகள் காரணமாக இவ்வாறு நெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸமஹாராம, ஹம்பாந்தோட்டை, கதிர்காமம் மற்றும் புத்தள போன்ற பிரதேசங்களில் இவ்வாறு கூடுதல் தொகைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் நெல் 165 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கொழும்பைச் சேர்ந்த செல்வந்தர்கள் இவ்வாறு கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பயறு, கௌபி போன்ற தானியங்களின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் அவற்றையும் செல்வந்தர்கள் களஞ்சியப்படுத்த தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸமஹாரம, ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளின் கிராமங்களில் செல்வந்தர்கள் சஞ்சரிப்பதனை காண முடியும் எனவும், அவர்கள் இவ்வாறு கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.