இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழ் மாணவி – யார் இவர்?

19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி மாவட்ட வீராங்கனை சதாசிவம் கலையரசி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்விகற்கும் சதாசிவம் கலையரசி என்ற மாணவி, இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.

11வயதில் துடுப்பாட்டத்தில் தனது பயணத்தை ஆரம்பித்த கரையரசி கோட்டம் முதல் தேசியம் வரை பல மட்டங்களில் போட்டிகளில் பங்குபற்றி தனது திறமையை வெளிப்படுத்தி வந்த ஒரு இளம் வீராங்கனை ஆவார்.

கலையரசியின் பந்து வீச்சு மற்றும் சிறந்த துடுப்பாட்டம் தான், இன்று தேசிய அணிக்கு தெரிவாக வாய்ப்பாக மாறியிருக்கிறது.

துடுப்பாட்டம் மட்டும் கலையரசியின் திறமை அல்ல. எல்லே, உதைபந்து, கரப்பந்து, கபடி, தடகள போட்டி என அனைத்திலும் திறமை காட்டும் ஒரு வீராங்கனை அவர்.

கலையரசி இந்தப் படிக்கல்லை அடைய ஊக்கப்படுத்திய பாடசாலை சமூகத்தினர், பெற்றோர் மற்றும் மாணவியை பயிற்றுவித்த பாடசாலை பயிற்றுவிப்பாளர் ஆகியோருக்கும், திறமைக்கு சொந்தகாரரான கலையரசிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.